வேதாரண்யம் பகுதியில் வயல்களில் அழுகி வீணாகும் வெள்ளரி
ஊரடங்கு காரணமாக விற்பனையாகாததால் வேதாரண்யம் பகுதியில் வயல்களில் அழுகி வெள்ளரி வீணாகி வருவதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
ஊரடங்கு காரணமாக விற்பனையாகாததால் வேதாரண்யம் பகுதியில் வயல்களில் அழுகி வெள்ளரி வீணாகி வருவதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
வெள்ளரி சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் மருதூர், தென்னம்பலம், நெய்விளக்கு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரிய குத்தகை, செம்போடை, நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
வெள்ளரியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வெள்ளரி உடல் சூட்டை தணிக்கும். வயிற்று புண்ணை ஆற்றி குளிர்ச்சி தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மை தரும் பொருளாக வெள்ளரி விளங்குகிறது. வெள்ளரிக்காய் குழந்தை முதல் முதியவர் வரை விரும்பும் உணவாக விளங்குகிறது.
அழுகி வீணாகி வருகிறது
இத்தனை மருத்துவ குணம் கொண்ட வெள்ளரிக்காய் தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக விற்பனையாகாமல் வயலில் செடியிலேயே முற்றி அழுகி வீணாகி வருகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ 5 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதனால் கடும் நஷ்டம் அடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story