தடுப்பூசி போடுவதற்கு குவிந்த மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகாிக்கும் அபாயம்


தடுப்பூசி போடுவதற்கு குவிந்த மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகாிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 4 Jun 2021 10:11 PM IST (Updated: 4 Jun 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு குவிந்த மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகாிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தாராபுரம்
தாராபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு குவிந்த மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகாிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகாித்து வரும் நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் தினசாி பாதிப்பு 1200-க்கும் மேல் இருந்து வருகிறது. நோய் தொற்றால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகாித்து வருகிறது. இதனால் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனா். 
மேலும் மத்திய அரசு அங்கீகாித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை போடவும் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் தாராபுரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் அலோசியஸ் பள்ளியில் நேற்று தடுப்பூசி போடப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் வாட்ஸ் அப் தகவல்கள் பரவி வந்தன. 
குவிந்த பொதுமக்கள்
அதில் பொதுமக்கள் அனைவருக்கும் அரசு சாா்பில் தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் தங்கள் ஆதாா் அட்டையை எடுத்து வரவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதனை அறிந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 8 மணி முதலே அலோசியஸ் பள்ளி அருகே குவியத் தொடங்கினா்.
காலை 9 மணிக்கு மேல் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போடத் தொடங்கினா். இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் சாலையில் காத்துநின்று தடுப்பூசி போட்டு சென்றனா். அப்போது அவா்களுக்குள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதனால் தாராபுரத்தில் கொரோனா பரவல் அதிகாிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி போட வந்தவா்கள் அந்த சாலையின் 2 பக்கங்களிலும் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால் அங்கு போக்குவரத்து நொிசலும் ஏற்பட்டது.
டோக்கன்
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அதன் முழுபலன் கிடைக்க சில நாட்கள் ஆகும். அதற்குள் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவா்கள் மூலமாக மற்றவா்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. 
எனவே இதுபோன்று தடுப்பூசி போடும்போது மக்கள் கூட்டம் ஏற்படாதவாறு அதிகாாிகள் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏாியா வாாியாக இடம் தோ்வு செய்து, டோக்கன் வழங்கி குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டும் தடுப்பூசி போட வேண்டும். 
இதனால் கூட்ட நொிசலை தவிா்ப்பதோடு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story