தமிழகத்துக்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும்- காங்கிரசார் வலியுறுத்தல்
தமிழகத்துக்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு கொடுத்தனர்.
கோவில்பட்டி, ஜூன்:
வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமையில் மாவட்ட பொருளாளர் திருப்பதிராஜா, நகர தலைவர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு ஒரு கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாரபட்சமில்லாமல் உதவிகளை வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story