கம்பம் அருகே தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கம்பம் அருகே அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கம்பம்:
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை, கபசுர குடிநீர், மருந்து மாத்திரைகள் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். அப்போது சுகாதார அதிகாரிகளும் ரோந்து சென்றனர். இதில், குள்ளப்பகவுண்டன்பட்டியில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை அதிகாரிகள் பிடித்தனர்.
அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, குள்ளப்பகவுண்டன்பட்டியில் முகாமிட்டிருந்த மருத்துவக்குழுவினர், பிடிபட்ட பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story