2 வங்கிகளை சுகாதார துறையினர் பூட்டி சீல் வைத்தனர்


2 வங்கிகளை சுகாதார துறையினர் பூட்டி  சீல் வைத்தனர்
x
தினத்தந்தி 4 Jun 2021 10:40 PM IST (Updated: 4 Jun 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் 2 வங்கிகளை சுகாதார துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

தாராபுரம்
தாராபுரத்தில் வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் 2 வங்கிகளை சுகாதார துறையினர் பூட்டி  ‘சீல்’ வைத்தனர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தினசரி 30 ஆயிரத்தை கடந்து சென்றது. இதனால் தமிழக அரசு கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தளர்வுகள் கூடிய ஊரடங்கு பிறப்பித்தும் கொரோனா பாதிப்பு குறையாததால் மீண்டும் 24-ந் தேதி முதல் வரும் 7-ந்தேதி முடிய 2 வார காலம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது
தாராபுரம் பகுதியில் கடந்த 3 மாத காலமாக கொரோனா தொற்று அதிகரித்து  வருகிறது. இந்தநிலையில் தாராபுரத்தில் சர்ச் சாலையில் செயல்பட்டு வந்த சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஐந்து முக்கு கார்னரில் செயல்பட்டு வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 2 வங்கிகளில் தலா ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
வங்கிகளுக்கு ‘சீல்’
மேலும் மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 2 வங்கிகளுக்கும் சென்று கிருமிநாசினிகள் தெளித்தனர். மேலும் அந்த 2 வங்கிகளையும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக 2 வங்கிகளின் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

Next Story