253 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது
253 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது
கோவை
கோவையில் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் என்று இருந்தது. ஆனால் குணமடைவோர் எண்ணிக்கை தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது.
இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியது. புதிய நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு படுக்கைகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கடந்த 2-ந் தேதி 3,061 பேருக்கும், 3-ந் தேதி 2,980 பேர் என 2 நாட்களில் 6,041 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
அதே நேரத்தில் 2-ந் தேதி 4,488 பேரும், 2-ந் தேதி 4,546 பேர் என 2 நாட்களில் 9,034 பேர் குணமடைந்தனர். புதிய தொற்றை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் படுக்கைகளின் தேவையும் குறைந்து உள்ளது.
கோவையில் அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 4,612 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. இதில் 4,359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
253 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக உள்ளது. கடந்த வாரம் வரை ஒற்றை இலக்கத்தில்தான் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 நாட்களாக இதுபோன்ற வசதி உள்ள படுக்கைகள் கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு போன் எதுவும் வரவில்லை. இதனால் ஆக்சிஜன் படுக்கை தேவை குறைந்து வருவதாக கருதுகிறோம்.
மேலும் மேற்கண்ட ஆஸ்பத்திரிகளில் 3,067 சாதாரண படுக்கைகள் உள்ளன. இதில் 2,103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 964 படுக்கைகள் காலியாக உள்ளன. அதே நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 789 உள்ளது. இதில் 786 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
3 அவசர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 4,531 படுக்கைகள் உள்ளன. இதில் 3,076 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 1,455 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினர்.
Related Tags :
Next Story