கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பலி


கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 11:14 PM IST (Updated: 4 Jun 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பலி

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி வசந்தி (35), மகள் ஓவியா (16) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் கெங்கலேரி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற மணிகண்டன், வசந்தி, அவரது மகள் ஓவியா ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்கைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த வசந்தி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story