வாணியம்பாடி அருகே கொரோனாவை விரட்ட ஆடுகள் வெட்டி பூஜை நடத்திய கிராம மக்கள்
வாணியம்பாடி அருகே கொரோனாவை விரட்ட ஆடுகள் வெட்டி பூஜை நடத்திய கிராம மக்கள்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிராமத்து மக்கள் தங்கள் பாணியில் சிறப்பு பூஜைகள் நடத்திட முடிவு செய்தனர். அதன்படி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துறையேறி கிராமத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு ஊரில் உள்ள தேசத்து மாரியம்மன், முத்துமாரியம்மன், காளியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்காக மூன்று ஆடுகளை வாங்கி வந்தனர்.
பின்னர் தொடர்ந்து கொரோனா நோய் பரவி வருவதை தடுக்கவும், இந்த ஊரில் இருந்து கொரோனாவை விரட்ட வேண்டியும் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஒரு பொது இடத்தில் மூன்று ஆடுகளை பலிகொடுத்து, சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி தாசில்தார் மோகன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story