ஏசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ரூ.12½ லட்சத்துக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்
ஏசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ரூ.12½ லட்சத்துக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி, ஜூன்:
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி ஏசுவிடுவிக்கிறார் ஊழியம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 500 போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் வளர்ச்சித்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முககவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏசுவிடுவிக்கிறார் ஊழியத்தின் மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் கெயின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், மேலாளர் செல்வக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story