விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2021 11:31 PM IST (Updated: 4 Jun 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளம், ஜூன்:
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவர் காந்திராஜ் மகன் செல்வஅந்தோணி (வயது 19). இவரும், அவரது சகோதரரும் கோவையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்தனர். செல்வஅந்தோணியின் தந்தை காந்திராஜ் அதே ஊரில் உள்ள பாப்பம்மாள் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பருவம் பார்த்து வருகிறார். இதில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தந்தை காந்திராஜிக்கும், தாயார் ஜெயசீலிக்கும் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் காந்திராஜ், மகன் செல்வஅந்தோணியை சும்மா இருப்பதாக கண்டித்து தோட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்வஅந்தோணி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story