வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.3¼ லட்சம் மதுபாட்டில்களை திருட முயற்சி
வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் மதுபாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
திருவலம்
டாஸ்மாக் கடை
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே கசம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த அரசு முழுநேர ஊரடங்கை விதித்துள்ளதால், டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடி, கடைக்கு வெளியே உள்ள மறைவிடத்தில் வைத்துள்ளனர்.
தப்பி ஓட்டம்
அப்போது திருவலம் போலீசார் ரோந்து பணிக்காக டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். போலீசார் வாகனத்தின் சைரன் ஒலியை கேட்ட மர்மநபர்கள் உடனடியாக திருடிய மதுபான பாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து திருவலம் போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இதே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு மதுபான பாட்டில்களை, திருடர்கள் திருடி சென்றனர். ஏற்கனவே துளையிட்ட சுவரின் அருகிலேயே, இப்போது துளையிட்டு திருட முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story