மழை காரணமாக வனப்பகுதியில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதியில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதியில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வால்பாறையில் உள்ள சோலையார் அணை பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன (பி.ஏ.பி.) திட்டத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மே மாதத்தில் இந்த அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக 5 அடிக்கு கீழ் சென்று விடும்.
ஆனால் கடந்த மாதத்தில் பெய்த மழை காரணமாக 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் 37 அடியை தாண்டி உள்ளது.
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். கேரளாவில் எப்போது தொடங்குகிறதோ அப்போதே வால்பாறையிலும் மழை பெய்ய தொடங்கும்.
பருவமழை தொடங்கியது
அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு இருந்தது.
சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் இங்குள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
குறிப்பாக காய்ந்து கிடந்த நீரோடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின
மேலும் வனப்பகுதியில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் அருவியாக கொட்டுகிறது. இதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.
இந்த அணைக்கு வினாடிக்கு 416 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 37.55 அடியாக உயர்ந்து இருக்கிறது.
ஒரு நாளில் மட்டும் 2 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
மழையளவு
வால்பாறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டர்) வருமாறு:-
வால்பாறை 52 மி.மீ, சின்னக்கல்லார் 26, நீராா் 24, சோலையார் அணை 23 மி.மீ மழையும் பெய்துள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story