மேலும் 411 பேருக்கு கொரோனா


மேலும் 411 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Jun 2021 12:35 AM IST (Updated: 5 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மேலும் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. 
சிகிச்சை 
மாவட்டத்தில் மேலும் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்பாதிப்பு எண்ணிக்கை 39,579 ஆக உயர்ந்துள்ளது.
 இதுவரை 32,834 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 1,026 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 6,304 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
5 பேர் பலி 
நோய் பாதிப்புக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 852 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 346 படுக்கைகள் காலியாக உள்ளன.
 சிகிச்சை மையங்களில் 1,563 படுக்கைகள் உள்ளநிலையில் 617 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 946 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு 
விருதுநகர் பெத்தனாட்சி நகர், சூலக்கரை, முருகநேரி, பாண்டியன் நகர், பெரியவள்ளிக்களம், அல்லம்பட்டி, புதுத்தெரு, சத்திரரெட்டியபட்டி, காமராஜர் காலனி, எம். செவல்பட்டி, தாதம்பட்டி, காந்திநகர், கடம்பன்குளம், குல்லூர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 குல்லூர் சந்தை அகதிகள் முகாமில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இலந்தைகுளம், திருத்தங்கல், பாலையம் பட்டி, அருப்புக்கோட்டை, வாழவந்தாள்புரம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மாந்தோப்பு, எம். ரெட்டியபட்டி, திருச்சுழி, ஆத்திப்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு 
 நேற்று மாவட்ட பட்டியலில் 71 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில பட்டியலில் 411 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்காத நிலைதொடர்கிறது. மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத்துறையிடம் வெளிப்படைத்தன்மையுடன் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Next Story