பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
பணகுடி:
நாகர்கோவில் தொழில் அதிபர் பயோனியர் குமாரசாமி சார்பில், பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 20 பல்ஸ் ஆக்சி மீட்டர், கையுறைகள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவற்றை சபாநாயகர் அப்பாவு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பனிடம் வழங்கினார்.
ஞானதிரவியம் எம்.பி., டாக்டர்கள் ராமலிங்கம், தேவ் மகிபன், சொக்கலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story