மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 5 Jun 2021 12:44 AM IST (Updated: 5 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

வத்திராயிருப்பு, 
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 
வத்திராயிருப்பு 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ேநற்று பலத்த மழை பெய்தது. 
1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. 
சிவகாசி 
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. 
மதியம் 3 மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குளம் 
ஆலங்குளம், ராசப்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, டி.கரிசல்குளம், தொம்பகுளம், கொங்கன்குளம், அம்பேத்கர்நகர், சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண் மறைநாடு, புளியடிபட்டி, கல்லமநாயக்கர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story