மளிகை கடைகளுக்கு ‘சீல்’


மளிகை கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 Jun 2021 12:46 AM IST (Updated: 5 Jun 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி திறந்து வியாபாரம் செய்த 2 மளிகை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை நடத்தினர். 

அப்போது ஊரடங்கை மீறி திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் 2 மளிகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. 


மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கினர். 


இதையடுத்து அந்த 2 மளிகை கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.


Next Story