துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்,
மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி
இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:-
விருதுநகர் தனி துணை தாசில்தாராக பணியாற்றிய ஜெயபாண்டி, சிவகாசி வட்ட வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகாசி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் தனம் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமையிட துணை தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமையிட துணை தாசில்தார் சிவானந்தம், வெம்பக் கோட்டை வட்ட வழங்கல்அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தூர்
வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா ஸ்ரீவில்லிபுத்தூர்தனித்துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தனி துணை தாசில்தார் வடிவேல், விருதுநகர் கலெக்டர் அலுவலக ஜி பிரிவு தலைமை உதவியாளராக நியமனம் பெற்றுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலக ஜி பிரிவு தலைமை உதவியாளர் சுப்பிரமணியன் கலெக்டர் அலுவலக பி பிரிவு தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலக பி பிரிவு தலைமை உதவியாளர் முத்துலட்சுமி, சாத்தூர் மண்டலத்துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை
சாத்தூர் மண்டல துணை தாசில்தார் ராஜீவ்காந்தி, விருதுநகர் கலெக்டர் அலுவலக ஹெச் பிரிவு தலைமை உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலக ஹெச் பிரிவு தலைமை உதவியாளர் செந்தில்குமார், வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். வத்திராயிருப்பு மண்டல துணை தாசில்தார் முத்துமாரி, திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயலட்சுமி, அருப்புக்கோட்டை தலைமையிட துணைதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை தலைமையிட துணை தாசில்தார் முருகன், அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் சோனையன், விருதுநகர் கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளர் மகேஸ்வரி, விருதுநகர் கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளர் காளிராஜன், வத்திராயிருப்பு தலைமையிட துணை தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வெம்பக்கோட்டை
வத்திராயிருப்பு தலைமையிட துணை தாசில்தார் தங்கம்மாள், விருதுநகர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் துணை தாசில்தார் தேவாமிர்தம், அருப்புக்கோட்டை தனி துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை தனி துணை தாசில்தார் கருப்பசாமி, காரியாபட்டி மண்டல துணை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரியாபட்டி மண்டல துணை தாசில்தார் பால்ராஜ், சாத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தூர் தலைமையிட துணை தாசில்தார் திருப்பதி, விருதுநகர் தனி துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் தனி துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை தலைமையிட துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்டவாறு கலெக்டர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story