வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
செந்துறை:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி முந்தைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் உள்ளது. நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தயங்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் பதில் தெரிவித்திருந்தார். இதையடுத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற குன்னம் தொகுதிக்கு முதல் முறையாக வந்த அமைச்சர் சிவசங்கருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் உள்ளிட்ட சில கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியிருந்தனர். இதனால் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story