இடி, மின்னலுடன் மழை
உடையார்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் உடையார்பாளையம், கழுமங்கலம், நாகல்குழி, வீராக்கன், பிலாக்குறிச்சி, முனையதரையன் பட்டி, தத்தனூர், சோழன் குறிச்சி, கட்சிபெருமாள், துலாரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story