வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2021 2:04 AM IST (Updated: 5 Jun 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி குன்னம் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

குன்னம்:

போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர், சின்ன பரவாய், பரவாய், வைத்தியநாதபுரம், பென்னகோணம், கிழுமத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற காரணங்களை கூறி மக்களை ஏமாற்றக்கூடாது என்றும், இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
கருப்பு கொடி
இதில் 6 கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் வீதிகளில் பொதுமக்கள் கருப்பு கொடியேந்தி கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

Next Story