கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு
நிமோனியா தொற்றால் இறந்தவர்கள் விவரமும் சேர்க்கப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர்:
பலி எண்ணிக்கை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,345 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 6,788 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக இருந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை நிமோனியா தொற்றுக்கு பலியான 22 பேர் எண்ணிக்கை விவரம், அரசு உத்தரவின்படி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
209 பேருக்கு தொற்று
மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான 2,465 பேரில் 1,977 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும், தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். 488 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுராந்தகம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story