தஞ்சையில் திடீர் மழை
தஞ்சையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம்
தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்து காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகு வெப்பத்தின் அளவு குறைவதற்கு பதிலாக கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மின் விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தாலும் வெப்பக் காற்று வீசியது. இதனால் தஞ்சை மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மின்தடை
நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்தாலும் மாலையில் கருமேகங்கள் திரண்டு வந்தன. தஞ்சையில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. இந்த மலை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. அவ்வப்போது மின்னல் வெட்டியது. காற்று, மின்னலுடன் பெய்த மழையால் தஞ்சை நகரில் மானம்புச்சாவடி, ரெயிலடி, மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. 20 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு சீரான மின்சாரம் கிடைத்தது. திடீர் மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
திருவையாறு
திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை பயிரான எள்ளு, உளுந்து, பயிறு, கடலை பயிர்களுக்கும், குறுவை சாகுபடிக்கு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவும் இந்த மழை பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதே போல வல்லம் பகுதியிலும் பரவலாக மழைபெய்தது.
Related Tags :
Next Story