ஆடு திருடிய 3 பேர் கைது


ஆடு திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 2:17 AM IST (Updated: 5 Jun 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி கிராமம் வால்காட்டுபுதூரை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கோபாலின் தோட்டத்தில் கட்டியிருந்த ஆடு ஒன்று திருட்டு போனது. கடந்த 2-ந் தேதி அதே பகுதியில் உள்ள அமைப்ப கவுண்டன்புதூரில் உள்ள அஜித்குமார் என்பவரது பூட்டிய வீட்டிற்குள் ஆடு ஒன்று கத்திக்கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கோபால் அங்கு சென்று விசாரித்தார். அதற்கு அஜித்குமார், அது தன்னுடைய ஆடு என்று கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அஜித்குமார் 2 பருடன் சேர்ந்து ஆட்டை கடத்த முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதில் அஜித்குமாருடன் சேர்ந்து ஆட்டை கடத்த முயன்றவர்கள் தாந்தோன்றிமலை பாரதி நகரை  சேர்ந்த ரெங்கநாதன் (22) மற்றும் தென்றல் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து கோபாலின் ஆட்டை திருடியதும் தெரிய வந்தது. தனையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story