மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 5 Jun 2021 2:32 AM IST (Updated: 5 Jun 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் விதிமுறையை மீறி செயல்பட்ட மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுரண்டை:
சுரண்டை நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் செயல் அலுவலர் வெங்கடகோபு தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது பஸ்நிலையம் ரோடு பகுதியில் விதிமுறைகளை மீறி மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு சில்லரை விற்பனைக்கு விற்றுக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்டரின் பெயரில் வீடுகளுக்கு மளிகை பொருட்கள் டெலிவரி செய்ய வேண்டும் அல்லது வாகனங்களில் கொண்டு சென்று மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்க வேண்டும் என்ற விதிமுறையை மீறியதால் கடை உரிமையாளர் மணி என்பவருக்கு அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story