ஊரடங்கை மீறிய 218 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


ஊரடங்கை மீறிய 218 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 Jun 2021 2:36 AM IST (Updated: 5 Jun 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறிய 218 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

கரூர்
தமிழகத்தில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவை கருதி காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வீடு தேடி வருகின்றன. இருந்தாலும் சிலர் ஊரடங்கை மீறி வெளியிடங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முக்கியமான பணிக்கு செல்பவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர். மற்றவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில் முககவசம் அணியாமல் வெளியே வந்த 117 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.23,400-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் சுமார் 15 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.7,500-ம் வசூலிக்கப்பட்டன. ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 74 வழக்குகள் பதியப்பட்டன.  மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 218 வழக்குகள் பதியப்பட்டன.

Next Story