குமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 1,008 ஆனது
குமரி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,008 ஆனது. புதிதாக 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,008 ஆனது. புதிதாக 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. ஆயிரத்துக்கு கீழே சென்ற பாதிப்பு கடந்த சில தினங்களாக 700-க்கு கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 642 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் நாகர்கோவிலில் மட்டும் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதே போல அகஸ்தீஸ்வரம்-69, கிள்ளியூர்-38, குருந்தன்கோடு-66, மேல்புறம்-52, முன்சிறை-27, ராஜாக்கமங்கலம்-71, திருவட்டார்-84, தோவாளை-43 மற்றும் தக்கலை-61 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் திருநெல்வேலியில் இருந்து வந்த 2 பேருக்கும், கேரளா மற்றும் தூத்துக்குடியில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.
16 பேர் பலி
அதே சமயம் குமரி மாவட்டத்தில் தினமும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து 10-ஐ தாண்டியே உள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story