கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 5 Jun 2021 4:32 AM IST (Updated: 5 Jun 2021 4:32 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் மீனா (வயது 22). இவர் பி.எஸ்சி. கணிதம் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு மகன் மனோ (25). இவர் கோவையில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனோவும், மீனாவும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி, வீரகனூர் காமாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் 2 பேரின் பெற்றோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மனோ வீட்டில் இருந்து மட்டும் அவருடைய உறவினர்கள் வந்தனர். மீனா உறவினர்கள் யாரும் வராததால் கெங்கவல்லி போலீசார், மனோவுடன், மீனாவை அனுப்பி வைத்தனர்.

Next Story