சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது.
சேலம்:
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு தகுந்தார்போல் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர் அதன்படி கடந்த பல நாட்களாக நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சேலத்தில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி சேலத்தில் ரூ.96.42 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.96.65-க்கும், 90.56-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் 27 காசுகள் உயர்த்தப்பட்டு 90.83-க்கும் விற்பனை செய்யப்பட்டன ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்குவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலக்கத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story