கவச உடையில் சென்று, கொரோனா வார்டில் போலீசாரை நலம் விசாரித்த போலீஸ் கமிஷனர் சத்துணவு தொகுப்பை வழங்கினார்


கவச உடையில் சென்று, கொரோனா வார்டில் போலீசாரை நலம் விசாரித்த போலீஸ் கமிஷனர் சத்துணவு தொகுப்பை வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jun 2021 5:23 AM IST (Updated: 5 Jun 2021 5:23 AM IST)
t-max-icont-min-icon

கவச உடையில் சென்று, கொரோனா வார்டில் போலீசாரை நலம் விசாரித்த போலீஸ் கமிஷனர் சத்துணவு தொகுப்பை வழங்கினார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் கொரோனா சிறப்பு பிரிவு செயல்படுகிறது. அங்கு போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த 82 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அங்கு சென்ற சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கவச உடை அணிந்து, சிகிச்சை பெறும் போலீசாருக்கு தைரியம் சொல்லி நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு பழங்கள் மற்றும் சத்துணவு அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள போலீசாரையும் கவச உடையுடன் சென்று நலம் விசாரித்தார். அவர்களுக்கும் பழங்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பு வழங்கப்பட்டது.

Next Story