மஞ்சூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்


மஞ்சூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Jun 2021 6:53 AM IST (Updated: 5 Jun 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சம் காரணமாக மஞ்சூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி,

கொரோனா அச்சம் காரணமாக மஞ்சூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கூட்டுறவு தொழிற்சாலை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் செய்து வருகின்றனர். இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை வழங்கி வருகின்றனர். இது தவிர 150-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு சுற்று வட்டாரத்தில் 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கொள்முதல் நிலையங்கள் மூலம் பச்சை தேயிலை வழங்கி வந்தனர்.இதற்காக ஆங்காங்கே 15 கொள்முதல் நிலையங்கள் உள்ளது.

கொள்முதல் நிறுத்தம்

 தற்போது கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அந்த தொழிற்சாலையில் நேற்று முதல் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் தங்களது உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் தொழிற்சாலை உறுப்பினர்கள் வசிக்கும் இடங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருக்கிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் பாதிப்பு

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பணிக்கு செல்லக்கூடாது என்று தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முழு ஊரடங்கால்  தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்று வருவதில் சிக்கல் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், விவசாயிகள் பச்சை தேயிலையை வினியோகம் செய்ய முடியாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதே போல் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story