மாட்டுப்பாலில் சத்து குறைவாக உள்ளதா? தன்னார்வ அமைப்புகளுக்கு மந்திரி எச்சரிக்கை
மாட்டு பாலில் சத்து குறைவாக உள்ளதாக கூறும் தன்னார்வ அமைப்புகளுக்கு மந்திரி சதேஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பால் விவகாரம்
சோயாவில் உற்பத்தி செய்யப்படுவது பால் கிடையாது என்று குஜராத் மாநில அரசின் அமுல் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எதிரான 3 வழக்குகளை இந்திய விளம்பர தர கவுன்சில் தள்ளுபடி செய்தது. அமுல் நிறுவனத்துக்கு எதிராக பியூட்டி வித்அவுட் கிருயல்டி (பி.டபிள்யு.சி.), பீட்டா, சாரன் இந்தியா ஆகிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தன. அந்த அமைப்புகள் தானியங்களில் இருந்து கிடைக்கும் பாலை விட மாட்டு பாலில் சத்து குறைவாக உள்ளது என்றும் கூறியிருந்தன. இதில் பீட்டா அமைப்பு, பால் கறப்பதன் மூலம் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன, எனவே தானியங்கள் மூலம் கிடைக்கும் பாலை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்தநிலையில் மக்களின் உணவு விருப்பத்தில் எந்த தன்னார்வ அமைப்புகளும் விதிமுறைகளை விதிக்க முடியாது என மாநில உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி சாதேஜ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
இதுகுறித்து அவர் டுவிட்டரில், "மாட்டு பால் ஆரோக்கியமான உணவு மட்டுமல்ல, அது சாதாரண மனிதனின் விருப்பம். மேலும் அது லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. எந்த தன்னார்வ அமைப்புகளும் எங்களின் உணவு பழக்கத்தில் விதிமுறைகளை வகுக்க முடியாது" என கூறியுள்ளார். சாதேஜ் பாட்டீல் கோலாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் உள்ளார். மேலும் கோலாப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் வாரியக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த கூட்டுறவு சங்கம் ‘கோகுல்' என்ற பெயரில் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
Related Tags :
Next Story