ஐதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தது
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
எனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புகிறது.அதன்படி தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 1 லட்சம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்தது. பின்னர் தடுப்பூசிகள் அனைத்தையும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசின் கிடங்கிற்கு சுகாதார துறை அதிகாரிகள் எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story