பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தளி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பஞ்சலிங்கஅருவி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு , உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது.
ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுமார் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது. வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
கொரோனாவால் தடை
தற்போது கொரோனா காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை. கோவில் நிர்வாகத்தின் சார்பில் மூன்று கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்குதல் காரணமாக பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த சூழலில் நேற்று திடீரென பஞ்சலிங்க அருவியின் நீர் ஆதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கு
இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு தடுப்புகளை தாண்டி கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு சுற்றிகட்டியிருந்தனர்.
மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மடத்துக்குளத்தில் கனமழை
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, சோழமாதேவி, தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, காரதொழுவு, ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதன் தொடர்ச்சியாக 2-ம் நாளாக நேற்று முன்தினம் லேசான மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது.
இதுபோல் 3-வது நாளான நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1மணிக்கு பெய்ய தொடங்கிய மழை. மெல்லமெல்ல வழுப்பெற்று, பின்னர் கன மழையாக பெய்யத்தொடங்கியது. இதன் காரணமாக மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில், தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த கன மழையாக பெய்தது. பின்னர் இடைவிடாது அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
மழை நீர் வெள்ளம்
இதன் காரணமாக மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகள், சாக்கடை கால்வாய்கள், நீர் நிலைகள் என அனைத்து பகுதியிலும் மழை நீர் வெள்ளம் கரைபுரண்டோடியது. தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் 3-வது நாளாக பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் பழுதடைந்துள்ள மண் சுவர்களால் ஆன வீடுகள், பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதுபோல் உடுமலையில் நேற்று பிற்பகல் 3மணிக்கு திடீரென்று மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த மழை, அதன் பிறகு தூரிக்கொண்டிருந்தது. அத்துடன் குளிர்காற்று வீசியது. மடத்துக்குளத்தில் கனமழை
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, சோழமாதேவி, தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, காரதொழுவு, ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதன் தொடர்ச்சியாக 2-ம் நாளாக நேற்று முன்தினம் லேசான மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது.
இதுபோல் 3-வது நாளான நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1மணிக்கு பெய்ய தொடங்கிய மழை. மெல்லமெல்ல வழுப்பெற்று, பின்னர் கன மழையாக பெய்யத்தொடங்கியது. இதன் காரணமாக மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில், தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த கன மழையாக பெய்தது. பின்னர் இடைவிடாது அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
மழை நீர் வெள்ளம்
இதன் காரணமாக மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகள், சாக்கடை கால்வாய்கள், நீர் நிலைகள் என அனைத்து பகுதியிலும் மழை நீர் வெள்ளம் கரைபுரண்டோடியது. தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் 3-வது நாளாக பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் பழுதடைந்துள்ள மண் சுவர்களால் ஆன வீடுகள், பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதுபோல் உடுமலையில் நேற்று பிற்பகல் 3மணிக்கு திடீரென்று மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த மழை, அதன் பிறகு தூரிக்கொண்டிருந்தது. அத்துடன் குளிர்காற்று வீசியது.
Related Tags :
Next Story