அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்


அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2021 9:34 PM IST (Updated: 5 Jun 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் கிராமத்தில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்புத்தோட்டத்தில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் கூறி வந்தனர். இதனால் விவசாயிகளும், கிராம மக்களும் பீதி அடைந்்தனர்.

வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி மற்றும் தாசில்தார் பழனிராஜன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். 
அதன்பேரில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, தாசில்தார் பழனிராஜன் மற்றும் ராணிப்பேட்டை வனத்துறையினர் நேரில் சென்று கரும்புத்தோட்டம் மற்றும் வயல்வெளியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதா? எனப் பார்த்தனர். 

அப்போது பல இடத்தில் சிறுத்தையின் கால் தடம் பதிந்திருந்ததைக் கண்டனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் சார்பில் கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க ஏற்பாடு செய்வதாக, கூறினர்.

Next Story