புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டத்தில், அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கம்பம், வடுகப்பட்டி, பெரியகுளம், ஜெயமங்கலம், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜெயமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அங்கு புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அல்லிநகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க தாலுகா தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அதுபோல், மாவட்டத்தின் பிற இடங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story