மடத்துக்குளம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை


மடத்துக்குளம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 5 Jun 2021 9:38 PM IST (Updated: 5 Jun 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மடத்துக்குளம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனைமேற்கொள்ளப்பட்டது. இதில் ஆவணங்கள் இன்றி வந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மடத்துக்குளம்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மடத்துக்குளம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனைமேற்கொள்ளப்பட்டது. இதில் ஆவணங்கள் இன்றி வந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட எல்லையில் சோதனை
மடத்துக்குளம் அருகே உள்ள திண்டுக்கல்- திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம், கடத்தூர் சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று தமிழக அரசு 11 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரகாலம் நீட்டித்தது. அதன்படி திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மடத்துக்குளம், கணியூர் போன்ற சோதனைச் சாவடிகளில் மடத்துக்குளம் மற்றும் கணியூர் பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து திண்டுக்கல்- திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான கடத்தூர் சோதனைச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றி கடந்து செல்வதாக கணியூர் போலீசாருக்கு தனிப்பிரிவு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கணியூர் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட போலீசார் கடத்தூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையை நடத்தினர். 
வாகனம் பறிமுதல்
இதில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஏராளமான வாகனங்கள், இரு மாவட்ட எல்லைக்குள்ளும் செல்ல போதிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் வந்த நிலையில், சம்பந்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முறையான இ-பதிவு இன்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த பல்வேறு ஊரடங்கு காலத்திலும், கணியூர் போலீசார் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமரா மூலம், கணியூர் போலீஸ் நிலையத்தில் இருந்தவாறே, தொடர்ந்து திண்டுக்கல்- திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியை தீவிரமாக கண்காணித்தும், தினந்தோறும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story