கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து


கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 5 Jun 2021 9:40 PM IST (Updated: 5 Jun 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நிலக்கோட்டை:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், தூத்துக்குடியில் இருந்து நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரியில் வந்தார்.

 நிலக்கோட்டையை அடுத்த வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். 

பின்னர் லாரிக்குள் சிக்கிய டிரைவர் செந்திலை மீட்டு, சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story