திராவகம் வீசி விடுவதாக மிரட்டுவதாக கணவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பரபரப்பு புகார்
பெங்களூருவில் திராவகம் வீசி தாக்குவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கணவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் போலீசாருக்கான பயிற்சி பிரிவில் துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி வர்ஷிதா. இவரது கணவர் பெயர் நிதின். இவர் ஐ.எப்.எஸ் அதிகாரி ஆவார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதின் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வர்ஷிதா புகார் அளித்திருந்தார்.
அந்த சம்பவம் டெல்லியில் நடந்திருந்தால், அந்த புகார் டெல்லி போலீசுக்கு கப்பன் பார்க் போலீசார் மாற்றி இருந்தனர். அதன்பிறகு குழந்தையை பார்க்க நிதின் தன்னை அனுமதிப்பது இல்லை எனக்கூறி தேசிய மகளிர் ஆணையத்தில் வர்ஷிதா புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டும், தேசிய மகளிர் ஆணையத்திற்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய கணவர் மீது மற்றொரு புகாரை ஐ.பி.எஸ். அதிகாரி வர்ஷிதா கொடுத்துள்ளார். பெங்களூரு விதானசவுதா போலீஸ் நிலையத்தில் கணவர் நிதின் மீது வர்ஷிதா புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் தன் மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டுவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி வர்ஷிதா தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story