நாயின் எலும்புகளை வைத்து மாந்திரீகம்?


நாயின் எலும்புகளை வைத்து மாந்திரீகம்?
x
தினத்தந்தி 5 Jun 2021 9:45 PM IST (Updated: 5 Jun 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே நாயின் எலும்புகளை வைத்து மாந்திரீகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்தூர் மலைப்பகுதியில் முடிமலையான் கோவில் உள்ளது. 

அந்த கோவில் அருகே உள்ள நீர் ஊற்றில் நேற்று முன்தினம் நாயின் மண்டை ஓடு, எலும்புகள் ஆகியவற்றுடன் வாலிபர் ஒருவர் பூஜை செய்வது போன்ற புகைப்படங்கள், மந்திரத்தகடுகள், எலுமிச்சை பழங்கள் போன்ற பொருட்கள் மாந்திரீகம் செய்யப்பட்ட நிலையில் கிடந்தன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த பொருட்களை மீட்டு ஊருக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி யாரேனும் பூஜை செய்தார்களா? என்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்டம் கூட்டக்கூடாது என்றும், இது குறித்து பின்னர் விசாரித்து கொள்ளுங்கள் என்றும் கூறி அவர்களை கலைந்து போக செய்தனர். 

நாயின் எலும்புகளை வைத்து மாந்திரீகம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story