தேனி மாவட்டத்தில் சிறுவன் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் சிறுவன் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சிறுவன் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 500-க்கு அதிகமாக இருந்த நிலையில் தற்போது 300-க்கு கீழ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 685 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 579 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 857 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
7 பேர் பலி
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவதானப்பட்டியை சேர்ந்த 78 வயது மூதாட்டி, சிலமலையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, சிந்தலைச்சேரியை சேர்ந்த 63 வயது முதியவர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, சின்னமனூரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 7 பேர் நேற்று உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story