கள்ளக்குறிச்சி அருகே தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்ற வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி அருகே தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்ற வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே புதூர்-புக்கிரவாரி கிராமத்தில் பழமலை மகன் ராஜமாணிக்கம்(வயது 34) என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வரஞ்சரம் போலீசார் புதூர்-புக்கிரவாரி கிராமத்துக்கு சென்று ராஜமாணிக்கம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கே ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு பாட்டிலை திறந்து பார்த்தபோது அதில் சாராயம் இருப்பது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜமாணிக்கத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 தண்ணீர் பாட்டிலில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story