மாவட்ட எல்லை சோதனை சாவடிகளை வருவாய் அதிகாரி ஆய்வு


மாவட்ட எல்லை சோதனை சாவடிகளை வருவாய் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2021 4:52 PM GMT (Updated: 5 Jun 2021 4:52 PM GMT)

சோதனை சாவடிகளை வருவாய் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

விராலிமலை, ஜூன்.6-
முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை இன்றி செல்லும் வாகனங்களை கண்காணிக்க அந்தந்த மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விராலிமலை அருகே புதுக்கோட்டை மாவட்ட எல்லையான ராசநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் கண்காணிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story