சங்கராபுரம் திருக்கோவிலூர் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
சங்கராபுரம் திருக்கோவிலூர் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தெத்துகாடு அருகே சாராயம் விற்ற விழாநெல்லி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது 24), விரியூர் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த நிர்மல்ராஜ்(27) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, சோழம்பட்டு ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த இளங்கோவன் (வயது 43), அ.பாண்டலம் ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த செந்தில்(36) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 70 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் செம்படை கிராமத்தில் நடத்திய அதிரடி சோதனையில் பாக்கெட் சாராயம் விற்ற குமாரசாமி(55) என்பவரை கைது சயெ்த போலீசார் அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story