திருக்கோவிலூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை


திருக்கோவிலூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2021 10:27 PM IST (Updated: 5 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி திவ்யா(வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் பாக்கியராஜ், இவரது தாய் தனம், தம்பி விஜி, அவரது மனைவி பூமா என்கிற மலர் ஆகிய 4 பேரும் சேர்ந்து 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு திவ்யாவை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தி்வ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து அவரது உடலில்பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திவ்யா பரிதாபமாக இறந்தார். 

இந்தநிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளது தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என திவ்யாவின் தாய் புஷ்பா(45) அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் திவ்யாவின் கணவர் பாக்கியராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story