ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது
திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.
திருவாரூர்:
திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.
200 பேருக்கு டோக்கன்
கொரோனா நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் வருகிற 14-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜூன் மாதத்திற்கு பொருட்கள் வாங்குதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இதில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் பொருட்கள் பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் 782 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 996 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாத பொருட்கள் வழங்குவதற்கான பணி தொடங்கியது.
15-ந்தேதி முதல் மளிகை பொருட்கள்
இதனையொட்டி திருவாரூரில் ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் சமூக இடைவெளியுடன் பொருட்கள் வழங்கப்பட்டது. வருகிற 15-ந்தேதி முதல் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story