தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீர்; வடிகால் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்


தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீர்; வடிகால் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jun 2021 10:50 PM IST (Updated: 5 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்பிக்நகர், ஜூன்:
தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. எனவே அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சாலையிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைநீர் தேங்கியது

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் பகுதியில் 2-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் தோப்பு தெரு பகுதியிலும், அத்திமரப்பட்டி விலக்கு பகுதியிலும் மழைநீர் தேங்கி உள்ளது.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

வடிகால் வசதி

மேலும் முத்தையாபுரம் கீதா நகர் குடியிருப்பு பகுதியில் பெய்த மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மழைநீர் தேங்காமல் வடிந்து செல்ல வடிகால் வசதி செய்து தரும்படி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story