கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 5 Jun 2021 10:55 PM IST (Updated: 5 Jun 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

காட்பாடி

காட்பாடியை சேர்ந்தவர் ப்ரீத் ஜெயக்குமார் (வயது 55). இவர் காட்பாடியை அடுத்த பனமடங்கி போலீஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
ப்ரீத் ஜெயக்குமார் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவருக்கு மேரி பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story