வால்பாறை சிகிச்சை மையத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


வால்பாறை சிகிச்சை மையத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2021 10:57 PM IST (Updated: 5 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை சிகிச்சை மையத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா சிறப்பு அதிகாரியும், தொழிலாளர்கள் நல ஆணைய உதவி ஆணையாளருமான வெங்கடேஷ் நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது சுகாதார ஆய்வாளரிடம் கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

தொடர்ந்து கொரோனா சிகிச்சை மையத்தின் அடிப்படை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள், பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் அவர்களின் பாதுகாப்பு நிலை தடுப்பூசிகள் குறித்து விசாரித்தார். 

இதையடுத்து வால்பாறை எஸ்டேட் பகுதியில் தனிமைபடுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், வால்பாறை தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவக்குமார், நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story