கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 35 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கருப்பு பூஞ்சை நோய்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
35 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
கடந்த 3-ந் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் 32 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 35 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story