கடலூர் மாவட்டத்தில் சாராயம், கள் விற்பனை செய்த 13 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் சாராயம், கள் விற்பனை செய்த 13 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பண்ருட்டி,
கொரோனா முழு உரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது சாராயம் விற்பனை கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடக்க போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் பெரிய காட்டுப் பாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு உள்ள பாலத்தின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜவன்னியன் மகன் ராஜேஷ் ( வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சாராயம் விற்றதாக ஆண்டிக் குப்பத்தை சேர்ந்த அய்ப்பனை பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.
பி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவரை காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமேதா கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.
பெண்ணாடம்
பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காரையூர் கிராமம் அருகே சாராயம் விற்ற பெண்ணாடம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அங்கமுத்து (40) என்பவரை பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமிலாபானு தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ஈச்சம் பூண்டி கிராமத்தில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணம் பாலன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த மோகன் (30), ஆனந்தராஜ் (19), பிரசாந்த் (23) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
புதுப்பேட்டை
புதுப்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபன் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நத்தம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த பெருமாள் மகன் ஜெயராமன் (45) என்பவரை கைது செய்தனர் .இதேபோல் திருவாமூரில் சாராயம் விற்ற வெங்கடேசன் (36), எனதிரிமங்கலத்தில் ராகவன் மகன் வெங்கடேசன் (50), அழகுபெருமாள் குப்பத்தில் பூப்போட்டலம் என்கிற கனகாம்பரம் (60), தமிழரசி (60) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி அடுத்த பாலக்கொல்லையில் விஷ சாராயம் காய்ச்சுவதாக ஆலடி போலீசாருக்கு ரகசிய தகல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, விருத்தாசலம் அடுத்த ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில், தனிப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ், போலீசார் சிலம்பரசன், சத்யகுமார் ஆகியோர் பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது, பலக்கொல்லையில் சாராயம் காய்ச்ச போடப்பட்ட ஊறலை அழித்தனர். இது தொடர்பாக மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்
மந்தாரக்குப்பம் போலீசார் வடக்கு வெள்ளூர் கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் கள் இறக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிமாறன்(28), ஜோசப் மகன் பிரகாசம்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story